சிறப்பு வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்ட மசோதாவில் குளறுபடி! அச்சப்படும் விவசாயிகள்

விவசாயிகள் முன் வைக்கும் கோரிக்கை

சிறப்பு வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்ட மசோதாவில் குளறுபடி! அச்சப்படும் விவசாயிகள்
விவசாயிகள் முன் வைக்கும் கோரிக்கை
  • Share this:
வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்ட மசோதா முழுமையானதாக இல்லை என்றும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றப்படுமா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் காவிரி ஆற்றுப்படுகை( டெல்டா ) பாசனம் ஆரம்ப காலத்தில் 36 லட்சம் ஏக்கருக்கு மேல் இருந்தது. கர்நாடகத்தில் இருந்து உரிய தண்ணீர் திறக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால், மெல்ல, மெல்ல குறைந்து 29 லட்சம் ஏக்கராக உள்ளது. குறிப்பாக பழைய டெல்டா என்று சொல்லப்படுகிற தஞ்சை, திருவாரூர், நாகை (ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம்)  குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகம் நெல் சாகுபடி செய்த டெல்டா மாவட்டங்களில் இன்றைக்கு ஒரு போக சாகுபடியே கேள்விக்குறியாகியது.

தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக ஒரு போக சாகுபடியும் பல இடங்களில் 2 போக சாகுபடியும் நடைபெற்றுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது. இந்நிலையில்,  காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக  முதலமைச்சர் அண்மையில் அறிவித்தார்.  இதை,  அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் அரசியல் கட்சியினர் வரவேற்றனர். நம்பிக்கையோடும் ஊக்கத்தையும் விவசாயிகள் பெற்றனர். தற்போது சிறப்பு வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்ட மசோதாவும் பேரவையில்  நிறைவேறியுள்ளது.


ஆனால், இதில் உள்ள சில குறைபாடுகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன என்கிறார்கள் விவசாயிகள். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்புத் திட்டங்களே கூடாது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைவு, மாசு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். விவசாயம், விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்பட டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து போராட்டங்களை மறைந்த வேளாண் அறிஞர்  நம்மாழ்வார் தொடங்கி வைத்தார்.

ஆனால், சட்ட மசசோதாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள எண்ணெய் எடுப்புத் திட்டங்கள் தொடரும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதலமைச்சரின் முந்தைய அறிவிப்பிற்கு மாறாக கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களின் டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தில் தவிர்த்திருப்பது விவசாயிகளிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொழிற்சாலைகளைக் காரணம் காட்டி திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள காவிரி பாசனப் பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read : பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலம்... என்னென்ன பலன்கள் கிடைக்கும்...?குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள சுமார் 5 லட்சம் ஏக்கருக்கு (2 லட்சம் ஹெக்டேர்) மேலான விவசாய பரப்பில் டெல்டா பாசனத்தில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் (50, 000 ஹெக்டேர்) வருகிறது. அதாவது மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஒன்றியங்களில், தொட்டியம் தொடங்கி முசிறி, ஸ்ரீரங்கம், மணிகண்டம், அந்தநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, திருவெறும்பூர் ஆகிய 8 ஒன்றியங்கள் காவிரி டெல்டாவில் வருகின்றன.

இதில், திருவெறும்பூர் ஒன்றியத்தில் மட்டும் குறிப்பிட்ட பகுதிகளில் BHEL, OFT, HAPP உள்ளிட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் பெரும்பான்மையாக விவசாயம் மட்டுமே இப்போதும் நடைபெறுகிறது. எனவே டெல்டா பாசனப் பகுதிகள் அனைத்தையும் சிறப்பு வேளாண் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பகுதிகளுக்குள் கொண்டு வர வேண்டும். குறைகள், குழப்பத்தை தரும் அம்சங்களை நீக்கி முழுமையானதொரு சட்டத்தை கொண்டு வரவேண்டும்  என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்