ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - திருவண்ணாமலை ஆசாமிக்கு தர்ம அடி

வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - திருவண்ணாமலை ஆசாமிக்கு தர்ம அடி

அமெரிக்கப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சாமியார்

அமெரிக்கப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சாமியார்

திருவண்ணாமலையில் தனியாக தங்கியிருந்த அமெரிக்கப் பெண்ணை ஒரு சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அமெரிக்கா ஆர்கான் மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது பெண், திருவண்ணாமலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 8 மாதங்களாக தங்கி உள்ளார்.

  திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவர் சாமியாராக வசித்து வருகிறார். இவர், கிரிவலப்பாதை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றித் திரியும்போது அருணாச்சலேஸ்வரர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அமெரிக்கப் பெண்ணைப் பார்த்துள்ளார். இதனால் கடந்த 1 மாதமாக இந்தப் பெண்ணை சாமியார் நோட்டம் விட்டு வந்துள்ளார்.

  Also read: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் உயிரிழந்தார்

  இந்நிலையில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் அமெரிக்கப் பெண் தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அமெரிக்கப் பெண் சாமியாரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் சாமியாருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்தப் பெண் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் வந்து சாமியாரை பிடித்து தர்ம அடி கொடுத்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசாரிடம் ஓப்படைத்தனர்.

  மேலும் இந்த சம்பவத்தில் அந்தப் பெண்ணிற்கு சிறு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சாமியாரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Rizwan
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Thiruvannamalai