காவிரியை மீட்க ஜக்கி வாசுதேவ் தலைக்காவிரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம்!

Web Desk | news18
Updated: August 31, 2019, 10:45 AM IST
காவிரியை மீட்க ஜக்கி வாசுதேவ் தலைக்காவிரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம்!
ஜக்கி வாசுதேவ்
Web Desk | news18
Updated: August 31, 2019, 10:45 AM IST
காவிரியை மீட்பதற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் வரும் 3-ம் தேதியிலிருந்து 15-ஆம் தேதி வரை தலைக்காவிரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஈஷா வேளாண் காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் இந்த தகவலை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் நதிகளை மீட்போம் இயக்கத்தின் இரண்டாவது களப்பணியாக, தென் இந்தியாவின் உயிர்நாடியான காவிரியை மீட்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கடந்த மாதம் தொடங்கி வைத்ததை குறிப்பிட்டார்.


இந்த இயக்கத்தின் மூலம் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி வடிநில பகுதியில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இப்பணியில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்மாறன் வேண்டுகோள் விடுத்தார்.

First published: August 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...