தமிழகத்தில் 1018 ஊர்களின் ஆங்கிலப் பெயர் திருத்தம் தொடர்பாக சத்குருவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் - ஒரு உணர்வுப்பூர்வமான மொழி, தொன்மையான கலாச்சாரமும்கூட. இடத்தின் பெயர்கள் அவற்றின் பெருமைவாய்ந்த கலாச்சார சிறப்பு, வரலாறு & ஆன்மீக முக்கியத்துவத்தை குறிக்கும். தமிழ் மக்களுக்கு தங்கள் மண்ணின் மீது ஆழ்ந்த பிடிப்பினை உண்டாக்கும் அதன் பெயர் சூட்டும் மரபினை காப்பது அவசியம்” என்று கூறியுள்ளார்.
இதேபோல், இந்தியாவின் பெயரையும் நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவும் மக்கள் மனதில் பெருமிதம் உருவாகவும் ‘பாரத்’ (பாரதம்) என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதற்கு முன்பு இந்தி திணிப்பு தொடர்பாக வட இந்திய ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு சத்குரு பதில் அளிக்கும் போது, “தமிழ் வெறும் ஒரு மொழி மட்டும் அல்ல. அது ஒரு கலாச்சாரம், பண்பாடு. மக்களின் மனதில் ஆழமாக வேர் ஊன்றியுள்ளது. தமிழ்நாட்டில் அவர்கள் தமிழை பேசுவது மட்டுமல்லாமல் அதை சுவாசிக்கின்றனர். தமிழுடன் இவ்வளவு ஆழமான உணர்வு ரீதியான தொடர்பு இருக்கும் போது உங்கள் மொழியை அவர்கள் மீது திணிக்க முயற்சிக்காதீர்கள்” என்று தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசினார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.