• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • TN Assembly : ‘தித்திப்பான உரை...’ மருத்துவ உலகமே முதலமைச்சருக்கு நன்றி கூறுகிறது - சதன் திருமலைக்குமார்

TN Assembly : ‘தித்திப்பான உரை...’ மருத்துவ உலகமே முதலமைச்சருக்கு நன்றி கூறுகிறது - சதன் திருமலைக்குமார்

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கும் திட்டம் ஆவின் பால் விலை குறைப்பு, இலவச பேருந்து பயணம் ஆகிய அறிவிப்புகள் மூலம் ஆளும் அரசு மக்கள் நல அரசாக செயல்படுகிறது.

  • Share this:
    மருத்துவ உலகமே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிவருகிறது என மதிமுக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் தமிழக சட்டப் பேரவையில் கூறினார்.

    தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மதிமுக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் பேசினார். அப்போது, முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் நலன் காக்கும் வகையில் அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கும் திட்டம் ஆவின் பால் விலை குறைப்பு, இலவச பேருந்து பயணம் ஆகிய அறிவிப்புகள் மூலம் ஆளும் அரசு மக்கள் நல அரசாக செயல்படுகிறது. மேலும், பேரவையில் நடைபெற்ற ஆளுநரின் உரை தித்திப்பான உரையாக அமைந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தென்காசியில் சித்தா பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கித் தர வேண்டும் புளியங்குடி நகராட்சியில் உள்ள ஒரு உழவர் சந்தை ஏற்படுத்தித் தரவேண்டும். புளியங்குடியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய வருவாய் கோட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கவச உடையை அணிந்து கொரோனா நோயாளிகளை கொரோனா வார்டுக்கே சென்று சந்தித்த செயலுக்காக மருத்துவ உலகமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-க்கு நன்றி கூறிவருகிறது.” என்று கூறினார்.

    முன்னதாக பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் ஆளுநர் உரையில் இல்லை. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் வழங்குவதைப் போல திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவில்லை.

    Must Read : செருப்பு அணியாமல் தமிழக சட்டசபைக்கு வந்து கவனத்தை ஈர்த்த பாஜக எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி

    திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் மற்றும் 7 உறுதி மொழிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை இவை பெருத்த ஏமாற்றத்தை தருகிறது.

    அதிமுக அரசு அமைத்த ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார வல்லுநர் குழு அறிக்கையையம் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். ஆவின் பால் மூன்று ரூபாய் உறைந்த நிலையில் அதனால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு அதனை அரசே ஏற்குமா என தெளிவு படுத்த வேண்டும்” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: