அர்ச்சகர்களுக்கு நிவாரணம்: தமிழக அரசுக்கு சடகோப ராமானுஜ ஜீயர் நன்றி

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமனுஜ ஜீயர்

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து கோயில் அர்ச்சகர் களுக்கும், உதவியாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 • Share this:
  ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களை சந்தித்தார்.

  அப்போது பேசிய அவர், “கோயில் அர்ச்சகர்களுக்கு 4,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு நன்றி.

  கிராமப்புறங்களில் உள்ள அனைத்து கோயில் அர்ச்சகர் களுக்கும், உதவியாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், கொரோனா தொற்று நீங்க வேண்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரே நாளில் சிறப்பு யாக பூஜைகள் நடத்த தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ஆந்திர அரசை போன்று ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு அந்த அந்த கோவில்களுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

  Must Read : 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோவில் பணியாளர்கள் 14 ஆயிரம் பேருக்கு, தலா 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: