ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தேனி மார்க்கமாக சபரிமலைக்கு போறீங்களா? அப்ப, இதை கவனத்தில் வெச்சிக்கோங்க!

தேனி மார்க்கமாக சபரிமலைக்கு போறீங்களா? அப்ப, இதை கவனத்தில் வெச்சிக்கோங்க!

சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவில்

தரிசனம் முடிந்து கேரளாவிலிருந்து திரும்பும் வாகனங்கள் குமுளியில் நெரிசலில் சிக்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே சபரிமலை செல்லும் பக்தர்கள் கம்பம்மெட்டு வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசன் தொடங்கியுள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வாகனங்களில் ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருகின்றனர். எனவே வாகன நெரிசலை தடுப்பதற்காக சில வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தமிழகத்திலிருந்து அதிகளவிலான ஐயப்ப பக்தர்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.

தரிசனம் முடிந்து கேரளாவிலிருந்து திரும்பும் வாகனங்கள் குமுளியில் நெரிசலில் சிக்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே சபரிமலை செல்லும் பக்தர்கள் கம்பம்மெட்டு வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர்.

தேனியில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் தேனி, கம்பம், கம்பம்மெட்டு, ஆமையார், புளியமலை, கட்டப்பனை, குட்டிக்கானம், முண்டக்காயம், எரிமேலி மற்றும் பம்பை வழியாக செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோவிலில் இருந்து திரும்பும் வாகனங்கள் பம்பை, குட்டிக்கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப்பெரியாறு, குமுளி, கம்பம் வழியாக தேனிக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also watch

Published by:DS Gopinath
First published:

Tags: Lok Sabha Key Constituency, Sabarimala