Home /News /tamil-nadu /

சபரிமலையில் கனமழை- பக்தர்கள் அவதி

சபரிமலையில் கனமழை- பக்தர்கள் அவதி

சபரிமலை

சபரிமலை

Sabarimala | சபரிமலையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக பக்தர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரபலம். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாநில எல்லைகளைக் கடந்து பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்துவருகின்றனர். குறிப்பாக, சபரிமலைக்கு தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

    குறிப்பாக, கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலைக்கு படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.

    சபரிமலை


    கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடனே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன் வாகனங்கள் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேனி மாவட்டத்தில் சபரிமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்தநிலையில், சபரிமலையில் கனமழை பெய்துவருகிறது. கனமழையின் காரணமாக சபரிமலைக்கு சென்ற பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Sabarimala

    அடுத்த செய்தி