ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - இல.கணேசன்

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - இல.கணேசன்

இல.கணேசன்

இல.கணேசன்

சபரி மலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது. அந்த தீர்ப்பை மறு பரீசிலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் பல இடங்களில் பேரணி நடைபெற்று வருகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி சபரிமலை கோவிலுக்குள் வந்த பெண்கள் மத நம்பிக்கை அற்றவர்கள். அவ்வாறு வந்த 15 பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

  சபரிமலை விவகாரத்தில் பாரம்பரியத்தைக் கடைபிடிக்க கோரியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் பேரணி நடத்தப்பட்டு வருகின்றது. கோவையில் இந்த பேரணியை பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் துவக்கி வைத்தார். கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் முன்பாக நிறைவடைந்தது.

  பேரணியை துவக்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த  இல.கணேசன், ‘சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது. அந்த தீர்ப்பை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் பல இடங்களில் பேரணி நடைபெற்று வருகிறது’ என்றார்.

  மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சொல்லி இருக்கின்ற வரிகள் ஐயப்பன் மீது பக்தி கொண்ட பெண்களுக்காக என்று தெரிவித்த அவர், தற்போது சபரிமலை கோவிலுக்கு வந்த பெண்கள் மத நம்பிக்கை அற்றவர்கள் என்றார்.

  மேலும் ஐயப்பன் கோவிலுக்கு வந்த 15 பெண்கள் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் இல.கணேசன் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து பேசியவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் நிர்பந்தம் காரணமாகவே சன்னிதானம் வரை பெண்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர் என குற்றம்சாட்டினார். கோவை மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட இந்த பேரணியில் மாநில பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஜயப்ப சரண கோஷங்கள் பாடியபடி பங்கேற்றனர்.

  Also see...

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Ayyappan temple in Sabarimala, Sabarimala, Sabarimala Ayyappan