• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • யுத்தகளம் போல உள்ளது சபரிமலை – பொன்.ராதாகிருஷ்ணன்

யுத்தகளம் போல உள்ளது சபரிமலை – பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

சபரிமலையில் மத்திய அமைச்சரையே கேரள அரசு இவ்வாறு நடத்துகின்றது என்றால் மக்களை எப்படி நடத்தும்? என எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பரிமலை ஐயப்பன் கோவிலின் புனிதத்தை கெடுக்க சதி நடப்பதாக மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். 

    அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நேற்று சென்றார். அப்போது அங்குள்ள காவல்துறை அதிகாரிகளுடன், அனைத்து வாகனங்களையும் சபரிமலை வரை அனுமதிக்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் மறுக்கவே, மற்ற பக்தர்களுடன் சேர்ந்து பேருந்தின் மூலம் சபரிமலை சென்று தரிசனம் செய்தார். 

    தரிசனம் முடிந்த நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ``சபரிமலை தற்போது யுத்தகளம் போல உள்ளது. ஐயப்பன் கோவில் கேரள அரசுக்கு சொந்தமானதல்ல. அதை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டுமே மாநில அரசிடம் உள்ளது. ஐயப்பன், மக்களுக்கு மட்டுமே சொந்தமானவர்.

    மனிதாபிமான நோக்கத்தோடு பக்தர்களை அணுக வேண்டும். சபரிமலை கோவிலுக்குச் செல்லும் பக்தர்களிடம் கெடுபிடி செய்யக் கூடாது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

    சபரிமலையில் மத்திய அமைச்சரையே கேரள அரசு இவ்வாறு நடத்துகின்றது என்றால் மக்களை எப்படி நடத்தும்? என எண்ணிப் பார்க்க வேண்டும்.

    கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை அரசியலாக்க பார்க்கின்றனர். அந்த நிலை மாற வேண்டும்’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: