பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பெயரில் சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், பதிலுக்கு பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சபரீசன் லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், இந்த பாலியல் சம்பவம் தொடர்பாக திமுக ஆதரவு இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தூண்டுதலால் தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பதிவு செய்யப்படுவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போலீசில் புகார் அளித்தார்.

சபரீசன்
இந்த புகாரின் அடிப்படையில் சபரீசன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சபரீசன் தரப்பில் இருந்து வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில் சபரீசன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்துள்ளதாகவும், பொள்ளாச்சி ஜெயராமனின் குற்றச்சாட்டால் சபரீசன் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதாக சபரீசனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Also See...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.