சென்னை வரலாற்றைக் கண்முன் நிறுத்திய எழுத்தாளர் முத்தையா காலமானார்!

சென்னையின் மறுகண்டுபிடிப்பு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றை பற்றி பல புத்தகங்கள் எழுதியவர்.

news18
Updated: April 20, 2019, 8:54 PM IST
சென்னை வரலாற்றைக் கண்முன் நிறுத்திய எழுத்தாளர் முத்தையா காலமானார்!
முத்தையா
news18
Updated: April 20, 2019, 8:54 PM IST
சென்னையின் வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்து எழுதி வந்த எழுத்தாளர் எஸ்.முத்தையா இன்று உடல்நலக் குறைபாடு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89.

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் என்ற நகரில் 1930ஆம் ஆண்டில் பிறந்தார் முத்தையா. இவர், கட்டிடப்பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். 1951 இல் டைம்ஸ் ஆப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து, ஞாயிறு இதழின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

சென்னையின் மறுகண்டுபிடிப்பு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றை பற்றி பல புத்தகங்கள் எழுதியவர். ' ஆங்கில இந்து பத்திரிகையில் சென்னை குறித்த வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அதுதவிர, 'சென்னை ம்யூஸிங்ஸ்' என்ற இலவச பத்திரிக்கையை நடத்தி வந்தார். அதில், சென்னை குறித்த பல அரிய தகவல்கள் இடம்பெறும். முத்தையாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.

Also see:

First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...