ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம்: தமிழக அரசு அறிவுறுத்தல்

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம்: தமிழக அரசு அறிவுறுத்தல்

காட்சிப் படம்

காட்சிப் படம்

ரஷ்யா-கிரீமியா இணைப்பு பாலத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உக்ரைனில் போர் தீவிரமாகியுள்ள நிலையில், தமிழக மாணவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

  உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து அங்குள்ள இந்தியர்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழகம் திரும்பிய மாணவர்கள் யாரும் அங்கு அதிகாரபூர்வமாக செல்லவில்லை என்றும் கூறியுள்ளது.

  உக்ரைன் போரால் தமிழகம் திரும்பிய மாணவர்கள் மீண்டும் அங்கு படிப்பை தொடர அதிகாரப்பூர்வமாக செல்லவில்லை. இந்த நிலையில் மீண்டும் உக்ரைன் போர் தொடங்கியுள்ளதால் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்தியா்கள் உக்ரைனுக்கும், உக்ரைனின் பிற பகுதிகளுக்கும் அவசியமில்லாமல் பயணம் மேற்கொள்வதைத் தவிா்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

  Also Read:  தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிக்கலாம்.. என்னென்ன கட்டுப்பாடுகள்?

  ரஷ்யா-கிரீமியா இணைப்பு பாலத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, உக்ரைன்தான் இச்சம்பவத்துக்கு காரணம் என ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. இதனை பயங்கரவாதச் செயல் என ரஷியா கூறியுள்ளது. இதையடுத்து உக்ரைனின் தலைநகரமான கீவ் உள்பட பல முக்கிய நகரங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது.

  இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தலில், தற்போது இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்தியா்கள் உக்ரைனுக்கும், அந்நாட்டில் உள்ள நகரங்களுக்கு இடையிலும் அவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தவிா்க்கவும். உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்றவும். உக்ரைனில் உள்ள இந்தியா்களை நாங்கள் (இந்திய தூதரகம்) அணுகும் வகையில், தங்களின் இருப்பை தூதரகத்துக்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Medical education, Russia - Ukraine