Home /News /tamil-nadu /

தமிழக மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க காரணம் என்ன?

தமிழக மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க காரணம் என்ன?

இந்தியாவில் பல மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு சென்று தமிழக மாணவர்கள் ஏன் படிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் பல மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு சென்று தமிழக மாணவர்கள் ஏன் படிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் பல மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு சென்று தமிழக மாணவர்கள் ஏன் படிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிப்பதற்கான காரணங்களை அங்கிருந்து தற்போது திரும்பியுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

    உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை நடத்த வருகிறது. அந்நாட்டில் தமிழர்கள் உள்பட இந்திய மாணவர்கள் கணிசமாக இருப்பதால், தமிழ்நாட்டிலும் உக்ரைன் விவகாரம் கவனம் பெற்றுள்ளது. உக்ரைன் நாட்டில் படிக்கச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்களாக இருக்கின்றனர்.

    இந்தியாவில் பல மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு சென்று தமிழக மாணவர்கள் ஏன் படிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் கூறியதாவது-

    நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு முயற்சி செய்தோம். ஆனால் நீட்டில் வெற்றி பெற முடியவில்லை. தனியார் கல்லூரிகளில் படிக்கலாம் என்றால் இங்கு அதிகபட்சம் 1 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் செலவாகும். எனவே நாங்கள் உக்ரைனுக்கு சென்று படிக்க முடிவு எடுத்தோம்.

    இதையும் படிங்க - Russia-Ukraine Crisis: அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக ரஷ்யா மிரட்டல் - ஐநா அவசர கூட்டத்தில் கண்டனம்

    இந்தியாவில் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே உக்ரைனில் படிப்பதற்கு தேவைப்படும். அதிகபட்சம் ரூ. 40 லட்சம் செலவில் இங்கு மருத்துவம் படிக்கலாம். செலவு குறைவு என்பதால் பலரும் உக்ரைனில் மருத்துவம் படிப்பதற்கு விரும்புகின்றனர்.

    பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்க விரும்பினோம். அங்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் ஒன்றரை வருட படிப்பு ஒன்றை முடித்திருக்க வேண்டும் என்பது பின்னர்தான் தெரிந்து கொண்டோம். எல்லா வகையிலும் பார்க்கும்போது மருத்துவ படிப்புக்கு உக்ரைன் தான் சிறந்த தேர்வாக இருக்கும். இந்தியாவில் சொல்லித் தரும் பாடத்திட்டம்தான் அங்கும் கற்றுத் தரப்படுகிறது.

    இதையும் படிங்க - உக்ரைன் தலைநகரை விட்டு இன்றைக்குள் இந்தியர்கள் வெளியேற திடீர் அறிவுறுத்தல்...

    போர் நடந்து வரும் சூழலில் நாங்கள் இந்தியா திரும்பியது நிம்மதி அளிக்கிறது. மற்றவர்களும் இதேபோன்று பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். தற்போது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். நிலைமை சீரடைந்து மீண்டும் உக்ரைனுக்கு படிக்கச் செல்வோம் என நம்புகிறோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Education, Russia - Ukraine

    அடுத்த செய்தி