கிராமப்புற கோவில்களில் பக்தர்கள் அனுமதி - என்னென்ன கடைபிடிக்க வேண்டும்?

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிராமப்புற கோயில்களில் மூன்று மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிராமப்புற கோவில்களில் பக்தர்கள் அனுமதி - என்னென்ன கடைபிடிக்க வேண்டும்?
சிறு கோவில் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: July 1, 2020, 8:44 AM IST
  • Share this:
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய 6-ம் கட்ட ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு 10,000 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள கிராமப்புற கோயில்களில் மூன்று மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் வழிபட தொடங்கியுள்ளனர்.

கிராமப்புற தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் இன்று முதல் வழிபாடு தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி தரைத்தளம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் ஆகிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.


சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
படிக்க: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?படிக்க: இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை
எனினும், கிராமங்களில் உள்ள பெரிய கோவில்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தொற்று பரவலை தடுக்கும் விதமாக மாவட்டங்களுக்குள் இயக்கப்பட்ட பேருந்துகள் வரும் 15ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளன.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading