• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மெட்ரோ ரயில் நிலையங்களைப் போல புதுப்பொலிவுடன் மின்னும் தென் மாவட்ட கிராமத்து ரயில் நிலையங்கள்!

மெட்ரோ ரயில் நிலையங்களைப் போல புதுப்பொலிவுடன் மின்னும் தென் மாவட்ட கிராமத்து ரயில் நிலையங்கள்!

கங்கைகொண்டான் ரயில் நிலையம்

கங்கைகொண்டான் ரயில் நிலையம்

"சுதந்திர போராட்டத்தில் தொடர்புடைய வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது"

  • Share this:
பெருநகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களைப் போலவே புதுப்பொலிவுடன் கிராமத்து ரயில் நிலையங்களும் மின்னுகின்றன. 

நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த பலர் சென்னை மும்பை பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் பணியாற்றுகின்றனர் இதனால் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்களில் எப்போதும் பயணிகளால் நிரம்பி காணப்படும் ரயில்வே நிர்வாகத்திற்கு அதிக வருவாய் கொடுக்கும் பகுதியாக விளங்குகிறது.

ஒற்றைப் பாதையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் அதிகமான கால விரயம் ஏற்பட்டு வந்தது கூடுதல் ரயில்களை இயக்க முடியவில்லை. ஏற்கனவே விருதுநகர் வரை இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விருதுநகரில் இருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லை நாகர்கோவில் வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், கடம்பூரில் இருந்து தட்டப்பாறை வரை பணிகள் நிறைவடைந்து, அதில் சோதனை ஓட்டமும் நிறைவு பெற்றுள்ளது. 2022 ஆரம்பத்தில் இந்த தடத்தில் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.



இதனிடையே விருதுநகர் முதல் தூத்துக்குடி மற்றும் நெல்லை வரையுள்ள வழியோர ரயில் நிலையங்களும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. சுதந்திர போராட்டத்தில் தொடர்புடைய வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

அதோடு கங்கைகொண்டான் ரயில் நிலையமும் புனரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தும் வகையில் மேற்கூரை, நடைமேடைகள், பயணிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என இவை அனைத்தும் பொழிவு பெற்றுள்ளன.



இவற்றை பார்க்கும் போது கிராமத்து ரயில் நிலையங்களா? அல்லது பெருநகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களா என்று ஆச்சரியப்படும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: