14 பக்கம் கொண்ட இந்த அறிக்கையில் முழுமையான மாநில அந்தஸ்து பெறப்படும்,மாநில அரசின்அனைத்து கடன்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 15வது நிதி ஆணையத்தில் புதுச்சேரியை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறப்பு அம்சமாக இடம் பெற்றுள்ளது.மேல் நிலை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 60 GB DATA மாதம்தோறும் இலவசமாக வழங்கப்படும். 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்,அனைத்து தரப்பு மாணவ மாணவியருக்கும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை படிப்பு இலவசம் அளிக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரிக்கென தனிக்கல்வி வாரியம்,புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் மருத்துவக்காப்புறுதி திட்டம்,குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் என புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் விவசாய பல்கலைக்கழகம் துவங்கப்படும், அனைத்து வீடுகளுக்கும் கட்டணமில்லா குடிநீர் இணைப்பு அளிக்கப்படும்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிட கழகம் மூலம் பெறப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படும், நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமிரா நிறுவப்படும்,ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அரிசி,பருப்பு,சர்க்கரை,சமையல் எண்ணெய் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சட்ட பல்கலைக்கழகம் நிறுவப்படும், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020 புதுச்சேரி ஏற்றுக்கொள்ளாது என்று அறிவிக்கப்படும். புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை முழுமையாக எதிர்த்து மின்துறை அரசுத்துறையாக தொடர நடவடிக்கை எடுக்கப்படும். மின்துறை தனியார் மயமாக்கபட மாட்டாது.• அனைத்து சுகாதார மையங்களிலும் பகல் முழுவதும் மற்றும் இரவு 10 மணி வரையிலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ வசதி வழங்கப்படும்.
ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் தற்போது சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வழங்கி வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா போன்ற தொற்று வியாதிகளுக்கென்று தனி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் நிறுவப்படும். மாநில மருத்துவ பல்கலைக்கழகம் புதுச்சேரியில் உருவாக்கப்படும்.புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி எந்த வித கட்டணமுமின்றி, இலவசமாக போடப்படும் இதற்கான செலவுத் தொகையை அரசே முழுமையாக ஏற்கும்.
காரைக்காலில் விவசாய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.• விவசாய விரோத மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.• விவசாயிகளுக்கு தற்பொழுது வழங்கப்படும் மானியத் தொகை ஹெக்டருக்கு 25000-லிருந்து ரூபாய் 30,000-மாக உயர்த்தி வழங்கப்படும்.மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, கடற்கரை மற்றும் உள்நாட்டு மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
2019-ஆம் ஆண்டின் இந்திய கடல் மீன் வளம் (ஒழுங்குப்படுத்தல் மற்றும் மேலாண்மை)சட்டத்திற்கு எதிர்ப்புகள் இருப்பதால் முழுமையாக அந்த சட்டத்தை நீக்குவதற்காகமத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மீன்வளத் துறையில் மீனவர்களுக்கு வேலைக்கு இட ஒதுக்கீடு செய்து தரப்படும். இயற்கை சீற்றங்களின் காரணமாக மீன் பிடிப்பவர்கள் இறக்க நேர்ந்தால் அதற்கான இழப்பீட்டுத்தொகை குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.