Home /News /tamil-nadu /

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் : சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைப்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் : சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைப்பு

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

Urban Local Body Election : தேர்தல் நடத்தை விதிகளின் படி தனி நபர் அதிக பட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்லலாம்.

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது நிலையில், சென்னையில் 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய வகையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்ட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய வகையில் 45 பறக்கும் படை அமைக்கப்ட்டுள்ளது. 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை 24 மணி நேரமும் வாகன சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    பணம், பொருட்களை பறிமுதல் செய்யும் போது வீடியோ எடுத்து அதன் விவரங்களை உடனுக்குடன் அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வியபாரிகளிடம் இருந்து பணம் பரிமுதல் செய்யப்பட்டால் உரிய ஆவனம் சமர்பித்த பிறகு திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Read More : நாஞ்சில் சம்பத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது.. தமிழக அரசு அறிவிப்பு

    மாநகராட்சிகள், மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்துமாறு ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. தேர்தலில் பணபட்டுவாடாவை தடுக்க வருவாய்துறையினர், போலீஸ் அடங்கிய சிறப்பு பறக்கும் படை அமைக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின் படி தனி நபர் அதிக பட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்லலாம்.

    Must Read : அவிநாசி அருகே பதுங்கியிருக்கும் சிறுத்தையின் காலடித்தடம், எச்சங்கள் கண்டுபிடிப்பு

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. சென்னை மாநகராட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சியும் இன்று தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai corporation, Local Body Election 2022

    அடுத்த செய்தி