Home /News /tamil-nadu /

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ரவுடிகளின் ராஜ்ஜியம் நடைபெறுகிறது: ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ரவுடிகளின் ராஜ்ஜியம் நடைபெறுகிறது: ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்து விடுகிறது என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ரவுடிகளின் ராஜ்ஜியம் நடைபெற்று வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலச்செவல் கிராமத்தில் பசும்பொன் தேசிய கழகத்தின் மாநில துணைத்தலைவர் இல்ல மனவிழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அங்கு திருமண மண்டபத்தில் அமர்ந்து இன்னிசை கச்சேரியில் எம்.ஜி.ஆர் பாடல்கள் பாடியதை கேட்டு மகிழ்ந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, தேர்தலுக்கு முன் 505 வாக்குறுதிகளை அளித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது. மகளிருக்கு உதவி தொகை ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. திமுகவின் ஓராண்டு ஆட்சியில் அதுபோன்ற மக்கள் நல  திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை .

திமுகவின் ஓராண்டு சாதனையில் மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்கள் வேதனையை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read : கள்ளக்குறிச்சியில் மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய அதிகாரி.. கடும் நடவடிக்கை கோரும் வைகோ

திமுக அரசின்  நிர்வாக சீர்கேட்டிற்கு பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்கியதே சிறந்த உதாரணம். அதிமுக ஆட்சியில்  பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கியது. பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் தரமில்லாத பொங்கல் பொருட்களை மட்டும்  பொங்கல் பரிசு தொகையும் இல்லாமல் வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் மொத்த நிதியில் 55 சதவீதம் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது. அடித்தட்டு மக்களும்  மேல் தட்டு மக்களுக்கு சமமாக வாழும் வகையில் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் வகுக்கப் பட்டது.  அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூக நலத்திட்டங்கள் மக்களின் கைகளுக்கு நேரடியாக சென்று சேர்ந்தது. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு  எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்து விடுகிறது. எப்போது மின்சாரம் வரும் எப்போது மின்சாரம் போகும் என தெரியாமல் விவசாயிகள்  மிகப்பெரிய வேதனையில் உள்ளனர். பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் விவசாயிகள் கவலையில்  உள்ளனர் என்றார்.

தொடர்ந்து அவரிடம், ஜெயலலிதா போல் நல்லாட்சியை  தருவேன் என சசிகலா கூறியது குறித்து கேட்டதற்கு வந்தால் பார்ப்போம் என பதில் அளித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: ADMK, DMK, OPS

அடுத்த செய்தி