ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சத்தியமூர்த்தி பவன் வன்முறை : காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ ரூபி மனோகரன் நீக்கம்

சத்தியமூர்த்தி பவன் வன்முறை : காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ ரூபி மனோகரன் நீக்கம்

ரூபி மனோகரன்

ரூபி மனோகரன்

கே.ஆர்.ராமசாமி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் பொருளாளரும், எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ. ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

    இதையடுத்து மோதல் தொடர்பாக விளக்கமளிக்க ரூபி மனோகரன் மற்றும் ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் நேரில் வந்து விளக்கம் தர இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று ரூபி மனோகரன் கோரியிருந்தார்.

    Also Read: ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடைய கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    இந்நிலையில் கே.ஆர்.ராமசாமி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ரூபி மனோகரனின் அவகாச சோரிக்கையை ஏற்கவில்லை என்றும், வன்முறை குறித்து அவர் விளக்கம் அளிக்கும் வரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் கூறினார்.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Congress