முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது - உயர்நீதிமன்றம்

ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது - உயர்நீதிமன்றம்

ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது - உயர்நீதிமன்றம்

ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது - உயர்நீதிமன்றம்

Driving license | தனது ஓட்டுனர் உரிமத்தை திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி  முன் விசாரணைக்கு வந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விபத்து ஏற்படுத்தியவரின் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிபவர் கே.பெருமாள். இவர் 2.4.2022-ல் ஓட்டிச் சென்ற பேருந்து வெம்பக்கோட்டை அருகே விபத்தில் சிக்கியது. இதில் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து பெருமாளின் ஓட்டுனர் உரிமத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தனது ஓட்டுனர் உரிமத்தை திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி  முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி  பிறப்பித்த உத்தரவில், விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யும் விவகாரத்தில் உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது.

Also read: பேரறிவாளனை கட்டியணைத்து வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்..

இந்த வழக்கில் மனுதாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமல் அவரது ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவுபடி ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாததால் ஓட்டுனர் உரிமத்தை மனுதாரருக்கு திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

செய்தியாளர் - கருணாகரன்

First published:

Tags: Driving License, RTO officer