முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்: அதிர்ச்சியடைந்த போலீசார்

ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்: அதிர்ச்சியடைந்த போலீசார்

 ஆர்டிஓ அலுவலர் பாபு வீட்டில் சோதனை செய்த போலீசார்

ஆர்டிஓ அலுவலர் பாபு வீட்டில் சோதனை செய்த போலீசார்

  • Last Updated :

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில் இருந்து 8.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாபு. இவர் முத்துக்குமார் என்பவருக்கு வாகன தகுதி சான்றிதழ் வழங்குவதற்காக 25,000 ரூபாய் கேட்டது தொடர்பாக பாபுவை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கடந்த 11-ம் தேதி கடலூரில் உள்ள பாபுவின் வீட்டில் கடலூர் மற்றும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார்  சோதனை மேற்கொண்டனர். அப்போது 35,00,000 ரூபாய் ரொக்கம், 125 சவரன் நகை, 6 வங்கிகளின் லாக்கர் சாவிகள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து பாபுவின் வங்கி லாக்கர்களில் கடந்த 2 நாட்களாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது லாக்கர்களில் 8.7 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து பாபுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது.

First published:

Tags: 8.7 KG Gold Sized, Bank Locker, Cuddalore, RTO officer, Vigilance officers