Home /News /tamil-nadu /

யானைகள் வழித்தடங்களை வரையறுக்கா நிலையில், அது யானைகளின் பாதை அல்ல என்ற முடிவுக்கு வருவது தவறானது : வன ஆர்வலர்கள்

யானைகள் வழித்தடங்களை வரையறுக்கா நிலையில், அது யானைகளின் பாதை அல்ல என்ற முடிவுக்கு வருவது தவறானது : வன ஆர்வலர்கள்

Youtube Video

ஈஷா யோகா மையத்தின் கட்டடங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளதாகவும், சட்ட விதிமீறல் எதுவும் கிடையாது எனவும் விளக்கமளித்தது.

    யானைகள் வழித்தடங்களை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை என்று ஆர்.டி.ஐ கேள்விக்கு கோவை மாவட்ட வன அலுவலகம் பதிலளித்துள்ளது. ஆனால், யானைகள் வழித்தடங்கள் எவை என்பது வரையறுக்கப்படாத நிலையில், அது யானைகளின் பாதை அல்ல என்ற முடிவுக்கு வருவது தவறானது என்று வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் அனுமதியை பெறாமல் கட்டடங்களை கட்டியுள்ளதாகவும், வனத்துறை நிலங்களுக்கு அருகிலே ஈஷாவின் கட்டடங்கள் இருப்பதால், மனித - விலங்கு மோதல்கள் நடப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், ஈஷா பவுண்டேஷன் மற்றும் ஈஷா யோகா மையத்தால் வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த தினேஷ்ராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வியெழுப்பியிருந்தார்.

    இதற்கு கோவை மாவட்ட வன அலுவலகம் அளித்துள்ள பதிலில், ஈஷா பவுண்டேசன் மற்றும் ஈஷா யோகா மையத்தால் வனப்பகுதியில் எந்தவித ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்றும், ஈஷா யோகா மையத்தின் கட்டுமானங்கள் எதுவும் வனப்பகுதியில் இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    ஈஷா யோகா மையம் அருகே யானைகளின் வழித்தடம் உள்ளதா என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ள வனத்துறை, கோவை வனச்சரகத்தில் வரையறுக்கப்பட்ட யானைகள் வழித்தடம் என எதுவும் இல்லை என பதில் அளித்துள்ளது.

    கோவை மண்டலத்தில் யானைகள் வழித்தடங்கள் எவை என்பது இன்னும் வரையறுக்கப்படவில்லை என்றாலும், அது யானைகளின் பாதை அல்ல என்ற முடிவுக்கு வருவது தவறானது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    வெள்ளியங்கிரி மலை அடிவாரப் பகுதிகளில் பழங்குடியின மக்கள் விவசாய பணி மேற்கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த இடங்களில் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    Must Read : இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

    இதுகுறித்து ஈஷா பவுண்டேசன் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, ஈஷா யோகா மையத்தின் கட்டடங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளதாகவும், சட்ட விதிமீறல் எதுவும் கிடையாது எனவும் விளக்கமளித்தது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Elephant routes, Isha yoga centre

    அடுத்த செய்தி