• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிறைத்துறையில் 100 கோடி மோசடி.. ஊழல் அம்பலமானது எப்படி?

சிறைத்துறையில் 100 கோடி மோசடி.. ஊழல் அம்பலமானது எப்படி?

மதுரை சிறை

மதுரை சிறை

மதுரை மத்திய சிறையில் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். முக்கிய ஆவணங்கள் மூலம் ஊழல் அம்பலமானது எப்படி?.

  • Share this:
    மதுரை மத்திய சிறையில் சிறைக் கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அரசுக்கு விற்கப்பட்டதாக 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 

    சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார் புகழேந்தி. இவர் சிறைக் கைதிகள் உரிமை மைய இயக்குநராக உள்ளார். மதுரை மத்திய சிறையில், கைதிகள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை அரசுக்கு இலவசமாக அளித்த வகையில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக இவருக்குத் தகவல் கிடைத்துள்ளது

    அதை உறுதி செய்ய இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளை அனுப்பினார். ஆனால் சிறைத் துறை அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை இதற்கிடையே சிறைத் துறை தொடர்பான முக்கிய கோப்புகள் புகேழந்திக்கு கிடைத்துள்ளன . அதில், மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகள் மூலம் அஞ்சல் உறைகள், கவர்கள், மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கட்டுத் துணி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத் தயாரித்ததில் தான் ஊழல் நடந்துள்ளதாகக் கூறுகிறார் புகழேந்தி.

    Also Read:  பணத்துக்காக மாமாவிடமே கடத்தல் நாடகம் ஆடிய மருமகன்.. போலீஸாரை அதிர வைத்த வாக்குமூலம்

    அஞ்சல் உறைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாவட்ட நீதித்துறை அலுவலகங்களுக்கு லட்சக்கணக்கில் அனுப்பப்பட்டதாக மதுரை மத்திய சிறையில் கணக்கு எழுதி வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த மோசடி வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக, சிறையின் நுழைவாயிலில் உள்ள பதிவேட்டில், மூலப் பொருட்கள் வந்ததாகவும் தயாரிப்பு முடிந்த பின் பொருட்கள் வெளியில் சென்றதாகவும் மிகச் சரியாக கணக்கு எழுதப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் .அதோடு நிற்காமல், 14 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்ய, கைதிகளுக்கு 16 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கணக்கு எழுதப்பட்டுள்ளது.

    Also Read:  60 அடி ஆழ கிணற்றில் விழுந்த கார்.. தந்தை, மகள் பலியான சோகம்

    சிறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பற்றிய கணக்குகள் சரியாக எழுதப்பட்டிருப்பதால் உள் தணிக்கையில் இந்த ஊழல் தெரியவர வாய்ப்பில்லை. ஆனால் எந்தெந்த இடங்களுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டதாக எழுதப்பட்டுள்ளதோ அந்த இடங்களில் தணிக்கை செய்து பார்த்தால் தான் ஊழல் வெளியில் தெரியவரும் என்கிறார். இதுதொடர்பாக உள்துறை செயலாளருக்கும் சிறைத்துறை டிஜிபிக்கும் புகாரளித்தும் பலனில்லாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.



    இந்த முறைகேடு குறித்து அரசு விரிவான விசாரணை நடத்தும் என திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன் தெரிவித்துள்ளார்.சிறைத் துறையில் 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக வழக்கறிஞர் சாட்டியுள்ள குற்றச்சாட்டிற்கு உரிய விசாரணை நடக்குமா என்பது நீதிமன்ற விசாரணைக்குப் பின்பு தான் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: