ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளில் 561 காட்டுயானைகள் உயிரிழப்பு...!

தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளில் 561 காட்டுயானைகள் உயிரிழப்பு...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் பெருகி வரும் வளர்ச்சி திட்டங்கள், காடழிப்பு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளில் 561 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் பெருகி வரும் வளர்ச்சி திட்டங்கள், காடழிப்பு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. வன உயிரின ஆர்வலர் ஆண்டனி ரூபின் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்து சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு வனத்துறை அளித்த பதிலில்

2015-61

2016-98

2017-125

2018-84

2019-108

2020 செப்டம்பர் வரை- 85 என மொத்தமாக 561 யானைகள் உயிரிழந்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2020-ம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 7 யானைகள் மின்சாரம் தாக்கி உயிழந்துள்ளதாகவும் அதில் 3 குட்டி யானைகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த  6 ஆண்டுகளில்  ஈரோடு மண்டலத்தில் 167, கோவை மண்டலத்தில் 134, தர்மபுரி மண்டலத்தில் 89 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் யானைகள் இறப்பு அதிகமானதைத் தொடர்ந்து யானைகளின் மரணம், வாழிட பிரச்னைகள், எண்ணிக்கை ஆகியவை குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு வனத்துறை சிறப்பு நிபுணர் குழு ஒன்றை தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் உருவாக்கியது.

Also read... தமிழகத்தில் நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது - அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனவுயிர் பிரிவு) சேகர் குமார் நீரஜ் தலைவராகவும், மதுரை மாவட்ட வன அதிகாரி ஆனந்த் உறுப்பினர் செயலராகவும் கொண்ட இக்குழுவில் யானை நிபுணர்கள். கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய 9 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள யானைகளின் எண்ணிக்கை, யானை மனித மோதல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இனிமேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், யானைகள் வாழிடங்களை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டியவை, யானைகளின் இறப்பு, பிறப்பு குறித்த ஆய்வு, யானைகளின் இறப்பை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆராய்ந்து டிசம்பர் 31-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்  உத்தரவிட்டிருந்தார்.

இந்தக் குழு தற்போது வரை இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. விரைவில் இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் யானை பாதுகாப்பிற்காக தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது வனவுயிர் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Forest Department, Wilf animal Elephant