Home /News /tamil-nadu /

தமிழக சுங்கச்சாவடிகளில் ஊழல் - அம்பலப்படுத்திய பாஸ்ட் டேக்?

தமிழக சுங்கச்சாவடிகளில் ஊழல் - அம்பலப்படுத்திய பாஸ்ட் டேக்?

சுங்கக் கட்டண வசூல்

சுங்கக் கட்டண வசூல்

2019ம் ஆண்டு  ஜூலை மாதத்தில் 5.08 லட்சம் வாகனங்களிடம் இருந்து 3.14 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.  ஆனால், நடப்பாண்டு ஜூலை மாதத்தில் 12.47 வாகன ஓட்டிகளிடம் இருந்து 8.83 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழகத்தின் சுங்கச்சாவடிகளில்  மின்னணு சுங்க கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு  மாபெரும் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்பதற்கான சந்தேகத்தை  பாஸ்டாக் மூலம் பெறப்பட்ட   சுங்கக் கட்டண வசூல்  ஏற்படுத்தியுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவியது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் விதமாக  பாஸ்டேக் (fastag) கட்டண முறையை மத்திய அரசு அமல் படுத்தியது. டிஜிட்டல் முறை பரிவர்த்தனை காரணமாக சுங்கச்சாவடிகளில் நெரிசலும் கணிசமாக குறைந்தது.

    தேசிய நெடுஞ்சாலையில் மின்னணு சுங்க கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டத்தில் இருந்து பயணர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணம் அதிகளவில் வசூலானது.  இதனால் இதற்கு முந்தைய ஆண்டுகளில் தரவுகள் திருத்தப்பட்டு பலகோடி ரூபாய் அளவுக்கு மோசடி எழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,  சென்னை- திருச்சி பரனூர் சுங்கக் சாவடியில் 2019 ல் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கூடுதலாக 7.39 லட்சம் வாகனங்களிடம் இருந்து  கட்டணம் வசூலிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு  ஜூலை மாதத்தில் 5.08 லட்சம் வாகனங்களிடம் இருந்து 3.14 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.  ஆனால், நடப்பாண்டு ஜூலை மாதத்தில் 12.47 வாகன ஓட்டிகளிடம் இருந்து 8.83 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது  ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரியவந்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளது.

    இதையும் படிங்க: FASTag என்றால் என்ன? எப்படி பெறுவது? எப்படி பயன்படுத்துவது?


    இதனால் 2019 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சுங்கச்சாவடிகளில் சில லட்சம் வாகன ஓட்டிகள் செலுத்திய சுங்கக் கட்டணம் கணக்கில் காட்டப்படாமல் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்படப்பட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயித்தல்) விதிகள், 2008 ன் படி, முழு திட்டச் செலவையும் உணர்ந்து பயனர் கட்டணம் 60 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும்.  வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களை சுங்கக்சாவடிகள் முழுமையாக கணக்கு காட்டாமல் இருப்பதன் மூலம், திட்டத்திற்கான செலவை வசூலிப்பதற்கு அவற்றுக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும். இது, ஒப்பந்தம் முடிந்த பிறகும் அதிக பயனர் கட்டணத்தை வசூலிக்க டோல் கேட் ஆபரேட்டர்களை அனுமதிக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று லாரி சங்கங்கள் வலியுறுத்துவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

    மேலும் படிக்க: உள்ளாட்சித் தேர்தல்... இன்றுடன் பரப்புரை நிறைவு: இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்


    பரனூர் சுங்கக்சாவடியில் மட்டும் இவ்வளவு வசூல்  அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தின் பிற பகுதிகளில் வசூலான சுங்கக்கட்டணம் எவ்வளவு, முந்தைய ஆண்டுகளுக்கும் தற்போதும் உள்ள வசூல் வித்தியாசம் எவ்வளவு , இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்த விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Fastag, News On Instagram, Tamilnadu news, Toll gate

    அடுத்த செய்தி