ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி உத்தரவு!

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தொற்று பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் வர ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆர்டி பிசிஆர் சோதனை முடிவுகள் அவசியம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு  மீண்டும் உச்சமடைய தொடங்கியுள்ளது. இந்தியாவின் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்து பதிவாகிவரும் நிலையில்,அதில் 50% பாதிப்பு கேரளாவில் மட்டும் பதிவாகிறது.  நேற்றைய தினம் கேரளாவில் 20,772 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

  தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் மாநகராட்சி உத்தரவையடுத்து 9 இடங்களில் வணிக நிறுவனங்கள் ,கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல், தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்கள் அடைக்கப்பட்டன.

  . இந்நிலையில், ஆகஸ்ட் 5ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வர ஆர்டி பிசிஆர் சோதனை முடிவுகள் அவசியம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் , மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்த்தனர்.

  இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பிரிட்டன் , பிரேசில் , தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா , மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் உடல் வெப்ப பரிசோதனையோடு சேர்த்து ஆர் .டி.பி சி ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. Pcr பரிசோதனைக்கு 900 ரூபாய் கட்டணம் பெறப்பட்டு 4 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது.

  மேலும் 13 நிமிடங்களில் பரிசோதனை முடிவை அறிவிப்பதற்கான முயற்சி ஓரிரு நாளில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

  உடல் வெப்பநிலை பரிசோதனையின்போது பச்சை நிறத்தில் இருந்தால் இயல்பானது , சிவப்பு நிறத்தில் மாறினால் உடல் வெப்பம் அதிகமாக இருக்கலாம் என்று கூறிய அவர், வரும் 5 ம் தேதி அதிகாலை முதல் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோவை , குமரி உட்பட அனைத்து கேரள எல்லைகளிலிருந்தும் வருபவர்களுக்கும் ஆர்டி பிசிஆர்  பரிசோதனை முடிவு கட்டாயம் என்றும்  தமிழக கேரள எல்லையில் வருவாய் , காவல் துறை மூலம் இந்த பரிசோதனை முடிவுகள் சரிபார்க்கப்பட்டு கண்கணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

  கேரளாவிலிருந்து தடுப்பூசி போட்டு 14 நாள் கழித்து வருவோர் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றினை காட்டி தமிழகத்துள் வரலாம் , இரு தவணை தடுப்பூசி செலுத்தியோருக்கு பிசிஆர் பரிசோதனை தேவை இல்லை. சான்று சரிபார்க்கப்பட்டு தமிழகத்துள் அனுமதிக்கப்படுவர்.

  கேரளாவிலிருந்து ரயில் , சொந்த வாகனத்தில் வருவோர் அனைவருக்கும் இது பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Corona, Kerala, Tamilnadu