ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை முடக்க நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும்: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை முடக்க நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும்: வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

ஆர்.எஸ்.எஸ் ஸை வீழ்ந்த முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி முயற்சிகள் படுதோல்வியில் முடிந்ததை இந்து விரோத திமுக அரசுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்- வானதி சீனிவாசன்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை முடக்க நினைப்பது பகல் கனவாகவே முடியும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள கோவை தெற்கு பாஜக சட்டமன்ற வானதி சீனிவாசன், உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது.சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான திமுக அரசின் நடவடிக்கைக்கு கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடப்பது இது தான் முதன் முறை என்பது போல சில அரசியல் தலைவர்கள் பேசி வருவதாக விமர்சித்துள்ள வானதி சீனிவாசன்,  1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அடுத்த சில ஆண்டுகளிலேயே தமிழகத்திலும் தொடங்கப்பட்டது.1940-ல் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையத்தில் தமிழகத்தில் இருந்து இரண்டு பேர் பயிற்சி முகாமில் பங்கேற்றதாக குறிப்பிட்டார்.

  நாட்டின் விடுதலைக்கு முன்பிருந்தே, விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடைபெற்று வருவதாகவும், கடந்த ஆண்டும் நடைபெற்றதாக கூறினார். ஆர்.எஸ்.எஸ் என்பது அரசியலமைப்பு சட்டப்படி பதிவ் செய்யப்பட்டு இயங்கும் ஜனநாயக இயக்கம். 97 ஆண்டுகள் நிறைவு செய்து 98வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

  மேலும் படிக்க: தமிழக அரசை கலைத்தால் என்ன? பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ட்விட்!

  அரசியலமைப்பு சட்டப்படி இயங்கும் அமைப்புக்கு அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, பொதுகூட்டம் நடத்த உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமையை பறிப்பது ஜனநாயகத்தை முடக்கும் பாசிச நடவடிக்கை என தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் அதன் தொண்டர்கள் சீருடை அணிந்து அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்வார்கள், அணிவகுப்பு முடியும் இடத்தில் பொதுகூட்டம் நடைபெறும்.

  அணிவகுப்பில் எந்த ஒரு கோஷமும் போடமாட்டர்கள். இப்படி97 ஆண்டுகளாக நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் எந்த ஒரு வன்முறையும் நடந்ததில்லை. ஆர்.எஸ்.எஸ் அரசியல் இயக்கம் அல்ல சமூக கலாச்சார, தேச பக்தி இயக்கம், தேசத்திற்காக தானாக முன்வந்து உழைக்கும் தன்னார்வலர்களை உருவாக்கும் அமைப்பு. இதனால் தான் உயர்நீதிமன்றத்திமும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்தது. உயர்நீதிமன்றம் விதித்த கட்டுபாடுகாளை முழுமையாக பின்பற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உறுதி அளித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது எந்த விதத்தில் நியாமல்ல. இது போன்ற இடையூறுகளை வைத்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை முடக்கி விடலாம் என யாரவது கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும். ஆர்.எஸ்.எஸ் ஸை வீழ்ந்த முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி முயற்சிகள் படுதோல்வியில் முடிந்ததை இந்து விரோத திமுக அரசுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன் என்றும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BJP, RSS, Tamilnadu, Vanathi srinivasan