ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்.. 24 இடங்களுக்கு நோ.. அனுமதி அளிக்கப்பட்ட 3 இடங்கள் எவை?

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்.. 24 இடங்களுக்கு நோ.. அனுமதி அளிக்கப்பட்ட 3 இடங்கள் எவை?

மாதிரி படம்

மாதிரி படம்

Rss Rally | நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த 24 இடங்களில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த 24 இடங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் 3 இடங்களுக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது.

  விஜயதசமி பண்டிகை மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

  இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க உத்தரவிட்டிருந்தது. மேலும் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால் காவல்துறை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

  இதற்கிடையில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியிருந்தார்.

  இதையும் படிங்க : 10 வருட அதிமுக ஆட்சியில் தமிழகத்தையே சீரழித்துவிட்டார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  இது தொடர்பாக மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில், ‘நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டம், ஒழுங்கு, சூழலுக்கு ஏற்றவாறு அனுமதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

  இந்நிலையில், நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த 24 இடங்களில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் 23 இடங்களில் உள் விளையாட்டரங்கில் (indoor) நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதியளித்துள்ளது. மற்ற இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இததொடர்பான சுற்றறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: RSS, Tamilnadu, Tamilnadu police