ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பல இடங்களில் ப்ளான் கேன்சல்.. 3 மாவட்டங்களில் மட்டும் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி!

பல இடங்களில் ப்ளான் கேன்சல்.. 3 மாவட்டங்களில் மட்டும் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி!

மாதிரி படம்

மாதிரி படம்

ஏற்கனவே கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பேரணிக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி இந்த மூன்று மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில்  ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார்கள் குவிக்கப்பட்டனர்.

  தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணிக்கு பாதுகாப்பு பணிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஒவ்வொரு பகுதியிலும் 1200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகள் வழங்கியது.  இதனால் அதிருப்தியடைந்த ஆர்எஸ்எஸ்  தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் அணுகி முறையிட இருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் திட்டமிட்டிருந்த பேரணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். ஆனால் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று(நவம்பர் 6) ஆர்எஸ்எஸ் பேரணி திட்டமிட்டப்படி நடைபெற்றது.

  Also read : ''வன்முறைக்கு வழியில்லை என்பதால் அணிவகுப்பை தள்ளிவைத்த ஆர்எஸ்எஸ்'' - வன்னி அரசு

  நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு, அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டு மற்றும் ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே கடந்த நவம்பர் 4ஆம் தேதி உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக பேரணி மற்றும் பொது கூட்டத்தை உள்அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளே நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருந்தது.

  இதற்குச் சட்ட ரீதியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதால், நவம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த அணிவகுப்பைத் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவோர் தரப்பில் தெரிவித்திருந்தனர். ஆனால் ஏற்கனவே கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பேரணிக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி இந்த மூன்று மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது.

  கடலூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சிபுரம் டிஐஜி காந்திமதி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், செங்கல்பட்டு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பிக்கள் மேற்பார்வையில் மூன்று மாவட்டங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் வரவழைக்கப்பட்டனர்.

  Also Read :  சென்னையில் தண்ணீர் லாரி ஓடாது.. பதற வைத்த சங்கம்! பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு!

  குறிப்பாக அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று(நவம்பர் 5) அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

  கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த பேரணி செல்லும் பகுதிகளை சுற்றியிருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மேலும் பேரணியில் பங்கேற்பாளர்கள் தவிர்த்து சாலைகளில் பொதுமக்கள் அனுமதி வழங்கப்படவில்லை.

  கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் இன்று(நவம்பர் 6) மாலை 4 மணிக்கு அணிவகுப்பு துவங்கியது. பேரணியை தொடர்ந்து  பொதுக்கூட்டம் நடைபெற்றது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Cuddalore, Kallakurichi, Perambalur, RSS