ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி: கோவை, திருப்பூரில் தடை விதிப்பு

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி: கோவை, திருப்பூரில் தடை விதிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

கோவை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோயில் ஆகிய 6 இடங்களை தவிர 44 இடங்களில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி  ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி  44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்துள்ளது.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்  அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி வழங்கவில்லை என கூறி காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்  நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.எஸ் தரப்பில் கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை காவல்துறை அவமதித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், தமிழகத்தில் தற்போது வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும்,  23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உளவுத்துறையின் அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்குவது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:  தமிழகத்தில் 8-ம் தேதி வரை மழை தொடரும் : வானிலை மையம் எச்சரிக்கை!

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  உளவுத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீதான புதிய வழக்குகளை குறிப்பிடாமல் 2007, 2008ஆம் ஆண்டுளில் பதிவான  வழக்குகளைதான் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,  பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையிலேயே உளவுத்துறையின் அறிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோயில் ஆகிய 6 இடங்களை தவிர 44 இடங்களில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி  ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.  பதற்றம் நிறைந்த பகுதிகளாக உள்ளதாக கூறி அனுமதி மறுக்கப்பட்ட 6 இடங்களில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் ஊர்வலம்  நடத்த காவல்துறையிடம் புதிதாக விண்ணப்பிக்கலாம் எனவும் ஊர்வலத்தில் அசம்பாவிதம் நடைபெற்றால் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதி  அறிவுறுத்தி உள்ளார்.

Published by:Arunkumar A
First published:

Tags: Chennai High court, RSS, Tamilnadu