ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், திருமாவளவன் பேரணி நடத்த அனுமதி மறுப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், திருமாவளவன் பேரணி நடத்த அனுமதி மறுப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பேரணிக்கு அனுமதி மறுப்பு

பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் வரும் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று நடைபெற இருந்த ஆர் எஸ் எஸ், திருமாவளவன் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆர்எஸ்எஸ் நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதற்கு தமிழகத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி,நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

  மேலும் ஆர் எஸ் எஸ் பேரணி நடத்தும் காந்தி ஜெயந்தி தினத்தன்று வி .சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் திருமாவளவன் அறிவித்தார். மேலும் இதற்கு நாம் தமிழர் கட்சி, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் திருமவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.

  இந்த நிலையில் திருவள்ளூரில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் செப்டம்பர் 27-ம் தேதி நிராகரித்தார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக் கூறி, அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாளர் பணீந்தர்ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, திருவள்ளூர் எஸ்.பி மற்றும் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  Also Read: தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் - காரணம் என்ன?

  அதில், அணிவகுப்புக்கு அனுமதி வழங்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அனுமதி மறுக்க எந்த அதிகாரமும் இல்லை எனவும், அனுமதி மறுத்த உத்தரவை உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில்  பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில் மத்திய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.

  மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.

  மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க கண்காணிக்க காவல்துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: RSS, Tamilnadu, Tamilnadu police