முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஈரோட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு: விசாரணை பிப்.3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஈரோட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு: விசாரணை பிப்.3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்றம்

ஈரோடு மற்றும் திருவாரூரில் ஜனவரி 29ம் தேதி அல்லது வேறொரு தேதியில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

கடந்த2022 அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தின் ஐம்பது இடங்களில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகள் விதித்து அனுமதி அளித்து உத்தரவிட்டது.

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உள்ளரங்கில் அணிவகுப்பை நடத்திக்கொள்ள ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுமதி வழங்கியது.

இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மற்றும் திருவாரூரில் ஜனவரி 29ம் தேதி அல்லது வேறொரு தேதியில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள்  நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீட்டு வழக்கு தீர்ப்பு நிலுவையில் உள்ளதால், இந்த மனுக்கள் மீதான  விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி,  விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

First published:

Tags: Chennai High court