Home /News /tamil-nadu /

மதுரை மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்பட்ட சமஸ்கிருத உறுதிமொழியில் ஆர்எஸ்எஸ் கோட்பாடு: மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

மதுரை மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்பட்ட சமஸ்கிருத உறுதிமொழியில் ஆர்எஸ்எஸ் கோட்பாடு: மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

மதுரை மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்பட்ட சமஸ்கிருத உறுதிமொழியில் ஆர்எஸ்எஸ் கோட்பாடு: மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

மதுரை மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்பட்ட சமஸ்கிருத உறுதிமொழியில் ஆர்எஸ்எஸ் கோட்பாடு: மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

மகரிஷி சரக் இந்திய மருத்துவத்தின் தந்தை என மத்திய அரசு சொல்வதால், மகரிஷி சரக் சபத் பெயரில் உறுதி மொழி எடுக்க வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்பட்ட சமஸ்கிருத உறுதிமொழியில் ஆர்எஸ்எஸ் கோட்பாடு புகுத்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

தொழிலாளர் தொழிலாளர் தினத்தையொட்டி சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1600 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கன்னி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்குபெற்ற இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்தி தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்தினார்.
சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் சூரி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.

அப்போது மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
அரசியலில் தூய்மையான பாதையை மேற்கொண்டு முதலமைச்சருக்கு இனிமையான தோழராக முத்தரசன் உள்ளதாக புகழ்ந்தார்.

இதையும் படிங்க - வணிக வளாகத்தில் புகுந்து கண்ணில் பட்டவர்களை ஓட ஓட துரத்திய எருமை... 3 மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்புத் துறை

மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு பாதகம் செய்வதில் தொடர்ச்சியாக உறுதியாக உள்ளதாக விமர்சித்த அமைச்சர் மா.சப்பிரமனியன், மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி, அதை தன் கவனித்திற்கு கொண்டுவராமல் அந்த மருத்துவமனை டீன் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுத்து கொண்டதாக கூறினார்.

மகரிஷி சரக் இந்திய மருத்துவத்தின் தந்தை என மத்திய அரசு சொல்வதால், மகரிஷி சரக் சபத் பெயரில் உறுதி மொழி எடுக்க வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஆனால், அந்த உறுதி மொழியில் ஆர்.எஸ்.எஸ் கோட்பாடு புகுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத பல கருத்துக்கள் அந்த உறுதிமொழியில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

எனவே, மதுரை அரசு மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். வழக்கமாக அரசு மருத்துவ கல்லூரியில் எடுக்கப்படும் இப்போகிரெடிக் உறுதி மொழியை மட்டுமே  எடுக்க வேண்டும் எனவும், வேறு உறுதி மொழி எடுக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து அரசு மருத்துவ கல்லூரிக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதைத்தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அடுத்த முறை மா. சுப்பிரமணியன் போட்டியின்றி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அடுத்த முறை நாங்கள் இந்த கூட்டணியில் இல்லாமல் கூட இருக்கலாம் என தெரிவித்தார்.

தன்னம்பிக்கைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதாரணமாக உள்ளார். மா.சுப்பிரமணியன்க்கு மருத்துவத்துறையை முதலமைச்சர் தந்துள்ளாரே, அதை எப்படி அவர் சமாளிப்பார் என முதலில் தாம் யோசித்ததாகவும் ஆனால், மருத்துவ துறையில் வேறு யாராலும் இதைவிட சிறப்பாக செயல்பட முடியாது என்பது போல்  மிக சிறப்பாக மா.சுப்பிரமணியன்,  செயல்படுகிறார் என புகழ்ந்தார்.

இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய முன் வந்ததை குறிப்பிட்டு கூறிய அவர், துன்பப்படுகிறவர்களுக்கு,  துயரப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால், கூட மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்கிற அவல நிலை நீடிப்பதாக கூறினார்.

வட மாநிலங்களில் கடவுளின் பெயரால் கலகம் நடப்பது போல், இங்கு ஆளுநர் பெயரால் கலகம் நடப்பதாக முத்தரசன் விமர்சித்தார்.

தஞ்சாவூர் தேர் விபத்தில், தேர் இழுத்தவர்கள் கவன குறைவாக இருந்ததற்கு, அரசை பொறுப்பாக முடியாது எனவும் முத்தரசன் கூறினார்.

முன்னதாக பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், உலகிலேயே விலை மதிப்பற்றது உழைப்பாளர்கள் வியர்வை. நடிகர் சூரி சார்லி சாப்ளினை போல் நம் அனைவருக்கும் நண்பராக உள்ளார் என கூறினார்.

இறுதியாக மேடையில் பேசிய நடிகர் சூரி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு முதலமைச்சர் கொடுத்தது, ஆயிரம் சதவீதம் பொருத்தமாக இருப்பதாக  சூரி புகழ்ந்து கூறினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன்  எப்போதும்  எளிமையாக மக்களோடு மக்களாக இருப்பதாகவும், மக்களுக்காக, அவர்  வாழ்கை முழுவதும் ஓடி கொண்டே இருப்பார் எனவும் குறிப்பிட்டார். மேலும், அவர் மா.சுப்பிரமணியன் அல்ல  மக்கள் சுப்பிரமணியன் என நடிகர் சூரி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் 1,600க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. மேலும் கண்பார்வையற்ற தந்தையை ஆட்டோ ஓட்டி கவனித்துக்கொள்ளும் கனிமொழி என்பவருக்கு முத்தரசன் பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Ma subramanian, Madurai Medical college students, Sanskrit

அடுத்த செய்தி