குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000; ஆட்சிக்கு வந்து 75 நாட்களாகியும் அறிவிக்காதது ஏமாற்றம்: கமல்ஹாசன்

ஸ்டாலினுக்கு கமல் கேள்வி!

திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும்

 • Last Updated :
 • Share this:
  குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் வலியுறுத்தி உள்ளார்.

  இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  “நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை, இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை முதன் முதலில் முன்வைத்த அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம்.

  குடும்பத் தலைவிகள் பொருளாதாரத்திற்கு கணவனைச் சார்ந்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. தங்களது தனிப்பட்ட ஆர்வம், கனவுகளுக்காக அவர்களால் செலவு செய்ய முடியாத நிலையில் தான் பெரும்பான்மையான பெண்கள் உள்ளனர். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்பு பெண்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரத்தை அளிக்கக் கூடியது.

  Also Read: கொடைக்கானலுக்கு வந்தும் பலனில்லை.. புலம்பும் சுற்றுலா பயணிகள்..

  வீட்டை பார்த்துக்கொள்ளும் குடும்பத்தலைவிகளின் உழைப்பின் மதிப்பு, கணவரின் அலுவலக வேலை மதிப்பை விட குறைந்ததல்ல என்று உச்சநீதிமன்ற ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்ந்துக்கொண்டன. தமிழகத்தில் துவங்கி அஸ்ஸாம் தேர்தல் வரை இது எதிரொலித்தது.

  திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது மிக குறைந்த தொகை. இல்லத்தரசிகளுக்கு எதுவுமே இல்லாத நிலையில் இந்த சிறிய தொகையாவது அவர்களுக்கு கிடைக்கிறதே என்று தான் கருதவேண்டியுள்ளது. ஒரு சிறு துவக்கம் என்கிற அளவில் மனதை தேற்றிக்கொள்ளலாம்.

  Also Read:  ஆன்லைனில் பீர் வாங்க முயன்ற முதியவர் ரூ.58,000ஐ இழந்தது எப்படி?

  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. சமூகநலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் தமிழகம் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.”

  இவ்வாறு கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  Published by:Arun
  First published: