Home /News /tamil-nadu /

ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்கும் டெண்டர் முறைகேடு புகாரில் பதிலளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு குறித்து வழக்கு பதியக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கில், மனுதாரரின் புகாரை விசாரித்ததில், முகாந்திரம் இல்லை எனக் கண்டறியப்பட்டதாகவும், டெண்டர் யாருக்கும் ஒதுக்காத நிலையில் முறைகேடு குற்றச்சாட்டு எப்படி எழும் எனவும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் இன்று தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டெண்டர் குறித்த தகவல்களை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Anti-corruption bureau, RS Barathi

    அடுத்த செய்தி