மு.க.ஸ்டாலின் கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு என்று வதந்தி பரப்புகிறார்கள் - ஆர்.எஸ்.பாரதி காட்டம்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கி வதந்தி பரப்பப்படுகிறது. இதுகுறித்து காவல் ஆணையரிடம் புகார் அளிக்கவுள்ளோம் என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு என்று வதந்தி பரப்புகிறார்கள் - ஆர்.எஸ்.பாரதி காட்டம்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
  • Share this:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சமீபகாலமாக திமுக மீதும் ஸ்டாலின் அவர்கள் மீதும் தவறான பிரச்சாரங்களை ஒரு கூட்டம் தவறாக செய்து வருகிறது. மக்கள் மத்தியில் திமுக தலைவருக்கு பெருகிவரும் ஆதரவை பொறுக்காமல் விஷமதனமான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

திமுக தலைவர் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு கருப்பர் கூட்டதின் சட்ட பூர்வ போராட்டத்துக்கு திமுக ஆதரவு தரும் என போலியான தகவலை பதிவிட்டு உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். அதுமட்டுமின்றி சைபர் கிரைமிலும் புகார் அளித்துள்ளோம். ஆனால் அதன்பேரில் நடவடிக்கை இல்லை.

முருகனை பழித்து பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது. திமுக தலைவரும் இதையே கூறியிருக்கிறார். இந்து, கிருத்துவ, முஸ்லிம் மக்கள் மு.க.ஸ்டாலின் பின்பு இருப்பதை மத்திய அரசின் உளவு துறை வாயிலாக அறிந்து கொண்டவர்கள் திட்டமிட்டே இது போன்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அண்ணா கூறியது போல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை கோட்பாட்டோடு இயங்கக்கூடியகட்சி திமுக.


நாளை முழு அடைப்பு என்பதால் நாளை மறுதினம் திமுக சார்பில் வழக்கறிஞரோடு ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளோம். குள்ளநரி கூட்டம் தமிழகத்தில் நுழைய உள்ளது. தமிழகத்தில் 100 க்கு 100 க்கு காவிக்கூட்டத்தை விரட்டியடித்தவர்கள். எனவே குறுக்குவழியில் நுழைய திமுக கூட்டணிக்கட்சிகள் அனுமதிக்காது’ என்றார்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading