பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க கூடாது என திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் - ஆர்.எஸ்.பாரதி

சட்டவிரோத பேனர்களை வைக்க மாட்டோம் என அனைத்து கட்சிகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறபித்தது.

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க கூடாது என திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் - ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி
  • News18
  • Last Updated: September 16, 2019, 4:32 PM IST
  • Share this:
கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்கள்,கட் அவுட்டுகள் வைக்க கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை  உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் பலியானார் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தது. விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்வும் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5 லட்ச ரூபாய் வழங்க வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேலும், சட்டவிரோத பேனர்களை வைக்க மாட்டோம் என அனைத்து கட்சிகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறபித்தது.


இதை தொடர்ந்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர்கள் நீலகண்டன் மற்றும் ரிச்சர்ட் வில்சன் நீதிபதிகளிடம் முறையிடனர்.

அப்போது, கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்கள்,கட் அவுட்டுகள் வைக்க கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிராமண பத்திரம் தாக்கல் செய்தனர்.

அதில், சட்ட விரோத பேனர்கள் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தவுகள் முழுமையாக பின்பற்றப்படும் எனவும்  நீதிமன்ற உத்தரவை தங்கள் கட்சி பின்பற்றுவது மட்டுமல்லாமல் பிற கட்சியினர் சட்ட விரோதமாக வைத்த பேனர்கள் வைத்ததை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்ததையும் குறிப்பிட்டு உள்ளனர்.2017 ஜனவரி மாதமே அப்போது கட்சியின் செயல்தலைவராக இருந்த ஸ்டாலின் பேனர்கள் வைக்ககூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கபட்டது.

Also see...

First published: September 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்