ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் ரத்து வழக்கு - உயர்நீதிமன்றத்தை அணுக காவல்துறைக்கு உத்தரவு

ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் ரத்து வழக்கு - உயர்நீதிமன்றத்தை அணுக காவல்துறைக்கு உத்தரவு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் ரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவை வாபஸ் பெற்று, சென்னை உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும் என தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த மாதம் 23ம் தேதி அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

Also see:

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்சநீதிமன்றம் வந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியது.

மேலும், ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவை வாபஸ் பெற்று, உயர்நீதிமன்றத்தை நாடவும் தமிழக காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published:

Tags: Judgement, RS Barathi, SC / ST Act