Home /News /tamil-nadu /

Headlines Today : தமிழகத்திற்கு ரூ.9,602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு - தலைப்புச் செய்திகள் (ஜூன் 1, 2022)

Headlines Today : தமிழகத்திற்கு ரூ.9,602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு - தலைப்புச் செய்திகள் (ஜூன் 1, 2022)

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

Headlines Today : தமிழகத்திற்கு 9,602 கோடி ரூபாய் GST நிலுவைத் தொகையாக மத்திய அரசு விடுவித்துள்ளது.

  மாநில அரசுகளுக்கு நிலுவையில் உள்ள ரூ.86,912 கோடி ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு விடுவிப்பு விடுவித்துள்ளது.

  தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக 14,006 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு 9,602 கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கியுள்ளது.

  டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை, தொடர்ந்து இரண்டாவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

  அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம், பணப்பலன்கள் மற்றும் ஓய்வு பெறும் வயது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

  திமுக தேர்தல் வாக்குறுதிகளின் நிலை குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் 14,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என தகவல்.

  தஞ்சையில் நகை மொத்த வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் 7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெய்த கனமழையால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பூதங்களுக்கு திருமணம் செய்யும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

  தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டு முதல் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

  மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வெளிநாடுகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதால், விமானநிலையங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

  இந்திய பொருளாதாரம் 2021 முதல் 2022- ஆம் ஆண்டு வரை 8.7% வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பிரபல பின்னணி பாடகர் கேகே என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் காலமானார். இவர் தமிழ் சினிமாவில் 60க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

  Must Read : தேசிய கல்விக் கொள்கையை படித்து புரிந்து கொண்ட பின்னரே கருத்து தெரிவிக்கிறோம்.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

  காஷ்மீரில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தக் கோரி பண்டிட்டுகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்புச் சாம்பியனான ஜோகோவிச்சை வெளியேற்றி, ரஃபேல் நடால் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

  ஆசிய கோப்பை ஹாக்கித் தொடரில் தென்கொரியாவுக்கு எதிரான போட்டி டிரா ஆனதால், நடப்புச் சாம்பியனான இந்தியா இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.

  சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் தங்கத்தை பதிவு செய்தது.
  Published by:Suresh V
  First published:

  Tags: GST, Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி