ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

MBBS சீட் வாங்கித்தருவதாக ரூ.57 லட்சம் மோசடி - பாதிரியார், கட்சிப் பிரமுகர்கள் கைது..

MBBS சீட் வாங்கித்தருவதாக ரூ.57 லட்சம் மோசடி - பாதிரியார், கட்சிப் பிரமுகர்கள் கைது..

MBBS சீட் வாங்கித்தருவதாக ரூ.57 லட்சம் மோசடி - பாதிரியார், கட்சிப் பிரமுகர்கள் கைது..

வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கிதருவதாக 57,00,000 ரூபாய் பெற்று மோசடி செய்ததாக பாதிரியார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள இறையியல் கல்லூரியில் பணியாற்றுபவர் பாதிரியார் சத்தியராஜ். இதே போல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் மாவட்ட செயலாளராக உள்ளவர் தேவா, அவரது தம்பி அன்பு கிராங்க். தேவா மீது கொலை, கொள்ளை, உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சத்தியராஜ், தேவா, அன்பு மூவரும் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக சிலரிடம் கூறி வந்துள்ளனர்.

  இதனை நம்பிய செங்கல்பட்டு மாவட்டம் காரணிபாக்கம் புதுச்சேரி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர், தனது மகனுக்கு சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் பெற்றுத்தரக்கோரி 2017 ஆம் ஆண்டு 57,00,000 ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

  பணத்தை பெற்றவர்கள் 2017ஆம் ஆண்டு சீட் பெற்றுத்தரவில்லை. அடுத்த ஆண்டு சீட் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் ஆண்டுகள் கடந்ததே தவிர எம்பிபிஎஸ் சீட் பெற்றுத் தரவில்லை.

  மேலும் படிக்க... Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 20, 2020)

  இதனால் நொந்துபோன சீனிவாசன் பணத்தையாவது திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பித் தர மறுத்த சத்தியராஜ், தேவா, அன்பு ஆகியோர் சீனிவாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

  இதனால் சீனிவாசன் வேலூர் மாவட்ட போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தேவா, சத்தியராஜ், அன்புகிராங்க் மீது வழக்கு பதிவு  செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Vellore