சென்னை மீனம்பாக்கத்தில் 54 லட்ச ரூபாய் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கத்தில் 54 லட்ச ரூபாய் பறிமுதல்

பணம் - மாதிரிப்படம்

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் நடந்த வாகன சோதனையின்போது தனியார் நகை கடையில் இருந்து உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 54 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

 • Share this:
  சென்னை மீனம்பாக்கம் பகுதியில் நடந்த வாகன சோதனையின்போது தனியார் நகை கடையில் இருந்து உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 54 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் ஓட்டுக்காக பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  அதன்படி பறக்கும் படை அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் சுரங்கப்பாதை அருகே மீனம்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக வந்த தனியார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, வாகனத்தில் ரூபாய் 54 லட்சம் இருப்பது தெரியவந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரனையில் பழவந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடையில் இருந்து பணத்தை கொண்டு வந்ததாக கூறப்பட்டது.

  Must Read :  கமல்ஹாசனையும் மக்கள் நீதி மய்யத்தையும் கடுமையாக தாக்கும் கவுதமி

   

  ஆனால், அதற்கான உரிய ஆவணம் இல்லாமல் பணத்தை எடுத்து வந்ததால் காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து ஆலந்தூர் மண்டல தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் ஒப்படைத்தனர்.
  Published by:Suresh V
  First published: