காவல் துறையினருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை; ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு - முதல்வர் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

காவல் துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறை பணியாளர்கள், தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை பெறுவார்கள்.

 • Share this:
  கொரோனா காலத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தலா ரூ.5000 வழங்க ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  முன்னதாக, கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக அரசு பல்வேறு நலதிட்டங்களையும், சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டது. அதில், கொரோனா முதல் அலையில் இருந்து முன்களப்பணியாளர்களாக அரும்பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்திருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், இன்று கொரோனா காலத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தலா ரூ.5000 வழங்க ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு, ரூபாய் 5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

  Also read: தி.மு.க ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் மின்வெட்டு தலைவிரித்து ஆடுகிறது - அ.தி.மு.க குற்றச்சாட்டு

  அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 58 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், காவல் துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறை பணியாளர்கள், தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை பெறுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: