முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆதிதிராவிடர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.5,000 கோடி பயன்படுத்தப்படவில்லை - ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்!

ஆதிதிராவிடர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.5,000 கோடி பயன்படுத்தப்படவில்லை - ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்!

ஆதிதிராவிடர் நல வாரியம்

ஆதிதிராவிடர் நல வாரியம்

நடப்பு நிதியாண்டில் ரூ. 16,442 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 9 மாதங்களில் மொத்தம் ரூ. 5,976 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த 9 மாதங்களில் மொத்தம் ரூ. 5,976 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ- மூலம் தகவல் தெரியவந்துள்ளது.

ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ. 5 ஆயிரம் கோடி பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கும் நிலையில், 2016 முதல் 2022 வரையிலான 6 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விபரங்களை மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாக கேட்டிருந்தார்.

அதிகபட்சமாக கடந்த நிதியாண்டில் ரூ. 2,418 கோடி ரூபாயை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதும், இதேபோல, கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 5,000 கோடி அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரூ. 16,442 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 9 மாதங்களில் மொத்தம் ரூ. 5,976 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று மாதங்களில் ரூ. 10,466 கோடியை செலவிட முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான திட்டங்களை முழுமையாக செயல்படுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

First published:

Tags: RTI, Scheduled caste, Tamilnadu