Home /News /tamil-nadu /

தடுப்பணை நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு

தடுப்பணை நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு

 நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு

நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு

உயிரிழந்தோரில் 5 பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

    கடலூர் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

    இதுதொடா்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் இன்று 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி (18), பிரியா (19), மோனிஷா (16), நவநீதம் (20), சுமிதா (18), காவியா (எ) திவ்யதா்ஷிணி (10), பிரியதா்ஷிணி (15) ஆகிய 7 பேரும் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால் அந்த பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிா்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா்.

    உயிரிழந்தோரில் 5 பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

    முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து - பாஜக செய்தித் தொடர்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்

    இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவா்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: CM MK Stalin, Cuddalore

    அடுத்த செய்தி