சேலம் மாவட்டம் அருகே தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியில் பாலாறு செல்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூர் அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தர்மபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய 3 பேரும் பரிசல் ஒன்றில் பாலாற்றில் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் அவர்கள் மான் வேட்டைக்கு வந்துள்ளதாக கருதி அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதனால், மீனவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் ராஜா என்பவர் மட்டும் திடீரென காணாமல் போனார். இதனால் அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனாலும் அவர் எங்கும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், ராஜாவின் சடலம் பாலாறு நீர் தேக்கப் பகுதியான காவிரி ஆற்றில் மிதப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு உறவினர்கள் சென்று பார்த்தபோது ராஜாவின் சடலம் மிதந்தது. இதைப்பார்த்து அவர்கள் கதறியழுதனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்களும் குவிந்தனர். மேலும் ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா மாநில வனத்துறை அடையாளம் தெரியாத 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
மேலும் மீனவர் ராஜாவின் இறப்புக்கு காரணம் கர்நாடக வனத்துறையினர் தான் எனவும், அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தான் ராஜா உயிரிழந்திருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இந்நிலையில், உயிரிழந்த தமிழக மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Karnataka, Tamilnadu