2021-2022 நிதி ஆண்டில் சட்டப்பேரவையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி கடன் உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 58,463 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 7,56,142 மகளிர் சுய உதவிக் உறுப்பினர்களுக்கு ரூபாய் 2749 கோடி 85 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 52,574 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 6 லட்சத்து 83 ஆயிரத்து 462 பயனாளிகளுக்கு தேசியமமாக்கப்பட்ட வங்கிகள் ,கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2,485.96 கோடி வங்கி கடன் மற்றும் 30 இ- சேவை மையங்கள் துவக்கி வைத்து 30 பயனாளிகளுக்கு உரிமம் வழங்கினார்.
அதேபோன்று சுயதொழில் தொடங்க தொழில் கடனாக நகர்ப்புற பகுதியைச் சேர்ந்த 931 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.26.60 கோடியும் 1381 தனிநபர்களுக்கு 16 கோடியே 9 லட்சமும். 4,702 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 57,451 பயனாளிகளுக்கு தொழில் துவங்கிட வங்கி கடனாக 219 கோடியே 37 லட்சமும் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.