Home /News /tamil-nadu /

கபடி போட்டியின் போது உயிரிழந்த விமல்ராஜ் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குக - முதல்வருக்கு கௌதமன் கோரிக்கை

கபடி போட்டியின் போது உயிரிழந்த விமல்ராஜ் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குக - முதல்வருக்கு கௌதமன் கோரிக்கை

உயிரிழந்த கபடி வீரருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்குக - கௌதமன்

உயிரிழந்த கபடி வீரருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்குக - கௌதமன்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கபடி போட்டியின்போது உயிரிழந்த விமல்ராஜ் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று கௌதமன் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  இது தொடர்பாக கௌதமன் கூறுகையில், ஊரே சுற்றி நின்று உற்சாகப்படுத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, கபடிக் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு வீரனின் உயிர் போவதென்பது தாங்க முடியாத துயரம். கடந்த 25 ஆம் தேதி விமல்ராஜ் என்கிற கல்லூரி மாணவன் களத்தில் பலியான காணொளி நம் அனைவரையும் நெஞ்சடைக்க செய்தது. விமல்ராஜ் என்கிற ஒரே ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுதத்து, அவரையும் இப்போது இழந்து நிற்கும் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு தாய் மனதோடு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 25 லட்சம் அளிக்க வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சய் (எ) விமல்ராஜ் (21) கபடி அணி வீரர். இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதோடு சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சியும் பெற்று வருகிறார்.

  இவர் பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடை பெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததும் கீழக்குப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் ஒருவர் பிடிக்க முற்பட்ட போது மீண்டும் எதிர்பாராத விதமாக விமல்ராஜ் மார்பில் அடிபட்டு அடுத்த சிலநொடிகளிலேயே அம்மண்ணில் அவரின் உயிர் பிரிந்தது.

  Also Read : ம‌லைக் கிராமத்தில் தனி ஒருவனாக இயற்கை விவசாயத்தில் அசத்தும் எம்பிஏ பட்டதாரி இளைஞர்

  கபடி வீரன் விமல் அவர்களின் மறைவுக்கு நேரில் வந்திருந்து அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் தெரிந்திருக்கும். +2 முடித்த தங்கை, தந்தை கண் பாதிக்கபட்டவர், அம்மா ஒரு வெகுளி, மோட்டார் கொட்டகை வடிவில் ஒரு சிறிய வீடு. இதுதான் விமல் குடும்பத்தின் இன்றைய நிலை. விமல் இல்லாமல் இனி எப்படி அவர்கள் வாழ்க்கையை எதிர் கொள்ள போகிறார்கள் என்கிற தவிப்பும் கலக்கமும் வந்திருந்தவர்களை பெரும் துயரத்திலாழ்த்தியது.

  ஆகையினால் தாய் உள்ளம் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களும் நிராதரவற்று நிற்கும் விமல் ராஜ் குடும்பத்திற்கு உடனடியாக ரூபாய் 25 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், விமல் ராஜின் தாய் அல்லது தங்கைக்கோ ஏதோ ஒரு அரசு வேலையும் கொடுத்து களத்தில் உயிரிழந்த அந்த கபடி வீரனின் குடும்பத்தில் ஒளியேற்றி வைக்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

  இதனிடையே கபடி போட்டியின்போது உயிரிழந்த விமல்ராஜ் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்  3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியும் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
  Published by:Vijay R
  First published:

  Tags: Director Gowthaman

  அடுத்த செய்தி