சென்னையில் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை ஆக்கிரமித்திருந்த இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அரசு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலையில் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிக்கப்பட்ட, 91 ஏக்கர் பரப்பிளவிலான அரசு நிலம் நீதிமன்ற உத்தரவுப்படி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிக்கப்பட்ட, 91 ஏக்கர் பரப்பிளவிலான அரசு நிலம் நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டது.
Also Read:
இனி ஏசி தேவையில்லை.. இந்த வெள்ளை பெயிண்டை அடித்தால் போதும்.. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!
அந்த இடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் விஜயராணி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு, இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்கள், மீட்கப்பட்டு வருவதாகவும், ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை கண்டறிய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வலியுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசு நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்ட விதிகளை மீறி, அனுபவிப்பவர்களிடமிருந்தும் மீட்கப்படும் என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.