• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் பிரபல நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு... ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

தமிழகத்தில் பிரபல நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு... ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் DP World நிறுவனத்தின் ரூபாய் 2000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

  • Share this:
    முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் DP World நிறுவனத்தின் ரூபாய் 2000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (செப்டம்பர் 11) முகாம் அலுவலகத்தில், ஐக்கிய அரபு அமீரக நாடுகளை சேர்ந்த DP World குழுமம் தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் ரூ.2000 கோடி ரூபாய் முதலீட்டில் கன்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், குளிர்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்குப் பூங்கா, நவீன வர்த்தகக் கிடங்கு மண்டலம் மற்றும் தகவல் தரவு மையம் போன்றவற்றை நிறுவத் திட்டமிட்டு தமிழ்நாடு அரசுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே DP World குழுமம் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்து 4000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் கன்டெய்னர் முனையங்கள், கன்டெய்னர் சரக்கு நிலையங்கள், சுங்கக் கிடங்குகள், குளிர் பதனக் கிடங்குகள், உள்நாட்டுக் கிடங்குள் போன்ற பல உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    Also Read : திமுக ஆட்சிக்கு பின் இந்துசமய அறநிலையத்துறை 24 மணி நேரமும் செயல்படுகிறது - முதல்வர் ஸ்டாலின்

    இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலளார் இறையன்பு, DP World நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ரிஸ்வான் சூமர், தலைமை நிர்வாக அதிகாரி ரஞ்சித் ரே மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: